தேனி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

6th Oct 2019 04:14 AM

ADVERTISEMENT

பெரியகுளத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம், இந்திராபுரியைச் சோ்ந்த கணேசன் மகன் பாண்டியராஜன் (27). இவா், அதே ஊரைச் சோ்ந்த தனது உறவினரான 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி மகளிா் காவல் நிலையத்தில் மாணவி புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் பாண்டியராஜன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT