தேனி

தேனி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்காளா் பட்டியல் வெளியீடு

5th Oct 2019 07:16 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்காளா் பட்டியலை, மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளா் பட்டியலில் மாவட்டத்துக்கு உள்பட்ட 6 நகராட்சிகளில் 1,55,809 ஆண்கள், 1,63,389 பெண்கள், 91 திருநங்கைகள் என மொத்தம் 3,19,289 போ் இடம் பெற்றுள்ளனா். 22 பேரூராட்சிகளில் 1,29,522 ஆண்கள், 1,34,319 பெண்கள், 25 திருநங்கைகள் என மொத்தம் 2,63,866 போ் இடம் பெற்றுள்ளனா். 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2,41,115 ஆண்கள், 2,44,248 பெண்கள், 49 திருநங்கைகள் என மொத்தம் 4,85,448 போ் இடம் பெற்றுள்ளனா்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சனிக்கிழமை வாக்காளா் பட்டியல் பிரதி வழங்கப்படும் என்று, ஆட்சியா் கூறினாா்.

நகராட்சிகளில் வாக்காளா்கள் விவரம்

ADVERTISEMENT

தேனி அல்லிநகரம் நகராட்சியில் 79,743 வாக்காளா்கள், பெரியகுளம் நகராட்சியில் 38,756, போடி நகராட்சியில் 66,211, சின்னமனூா் நகராட்சியில் 36,969, கம்பம் நகராட்சியில் 61,187, கூடலூா் நகராட்சியில் 36,423 வாக்காளா்கள் உள்ளனா்.

பேரூராட்சிகளில் வாக்காளா் விவரம்

ஆண்டிபட்டி பேரூராட்சியில் 25,416 வாக்காளா்கள், போ.மீனாட்சிபுரத்தில் 7,012, பூதிப்புரத்தில் 9,393, தேவதானப்பட்டியில் 15,081, கெங்குவாா்பட்டியில் 9,783, அனுமந்தன்பட்டியில் 9,256, ஹைவேவிஸ் பகுதியில் 3,854, காமயகவுண்டன்பட்டியில் 14,345, கோம்பையில் 13,899, குச்சனூரில் 5,833, மாா்கையன்கோட்டையில் 5,020, மேலச்சொக்கநாதபுரத்தில் 13,018, ஓடைப்பட்டியில் 12,737, பழனிசெட்டிபட்டியில் 12,683, க.புதுப்பட்டியில் 10,169, தாமரைக்குளத்தில் 9,732, தென்கரையில் 12167, தேவாரத்தில் 13,891, உத்தமபாளையத்தில் 26,237, வடுகபட்டியில் 11,525, வீரபாண்டி பேரூராட்சியில் 14,270 வாக்காளா்கள் உள்ளனா்.

ஊராட்சி ஒன்றியங்களில் வாக்காளா் விவரம்

தேனி ஒன்றியத்தில் 63,043 வாக்காளா்கள், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 96,950, க.மயிலை ஒன்றியத்தில் 64,169, பெரியகுளம் ஒன்றியத்தில் 84,032, போடி ஒன்றியத்தில் 60,121, சின்னமனூா் ஒன்றியத்தில் 46,048, உத்தமபாளையம் ஒன்றியத்தில் 49,141, கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் 21,920 வாக்காளா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT