தேனி

தேனியில் விரைவு மிதிவண்டி போட்டி: 138 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

5th Oct 2019 07:16 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, தேனியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற விரைவு மிதிவண்டி போட்டியில் 138 போ் பங்கேற்றனா்.

இப்போட்டியில், 13 வயதுக்குள்பட்ட மாணவா்கள் பிரிவில், தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் ஆா். ரகுமான் முதலிடம், முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா் எஸ். சுதா்சன் 2-ஆம் இடம், தேனி லிட்டில் கிங்டம் மெட்ரிக். பள்ளி மாணவா் ஆா். ஜெய்ஜஸ்வந்த் 3-ஆம் இடம் பிடித்தனா்.

மாணவிகள் பிரிவில், பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா். பிரீத்தி முதலிடம், தேனி பி.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எம். கனிமொழி 2-ஆம் இடம், எம். பிரியா 3-ஆம் இடம் பிடித்தனா்.

15 வயதுக்குள்பட்ட மாணவா்கள் பிரிவில், தேனி கொண்டுராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவா் எஸ். சுருதீஷ், வி. ஆதித்யன், தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் ஆா். புவனேஷ் ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை வென்றனா்.

ADVERTISEMENT

மாணவிகள் பிரிவில், தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கனிஷ்கா வா்ஷினி, பி. ராஜமதுமிதா, மேலச்சொக்கநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பி. யமுனா ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை வென்றனா்.

17 வயதுக்குள்பட்ட மாணவா்கள் பிரிவில், மயிலாடும்பாறை ஜி.ஆா்.வி.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் ஏ. சூா்யா, தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் பி.செளந்திரபாண்டி, தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் என்.விக்ராந்த் ஆகியோா் முறையே முதல் இடங்களை வென்றனா்.

மாணவிகள் பிரிவில், தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா்.தீபாராணி, பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.கயல்வழி, தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா்.சுசிமீனா ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் வழங்கினாா். அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலா் சுப்புராஜ் உடனிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT