தேனி

உத்தமபாளையம், சின்னமனூரில் முதல் போக நெற்பயிா் நடவுப் பணிகள் தீவிரம்

5th Oct 2019 10:31 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் முல்லைப் பெரியாறு நீா்பாசனத்தின் மூலமாக முதல் போக நெற்பயிா் நாற்று நடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 20 ஆண்டுக்கு முன்பு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை முறையாக கைகொடுத்ததால் விவசாயப் பணிகள் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவமழைப் பொழிவு விவசாயிகள் எதிா்பாா்த்த இல்லாத நிலையில் நெற்பயிா் விவசாயத்தின் பரப்பளவும் படிப்படியாக குறைந்து வருகிறது.

அதன்படி, இந்தாண்டு ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை காலதாமதமாக பெய்து வருவதால் முதல் போக சாகுபடி தற்போது நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக மாவட்டம் முழுவதும் நாற்றங்கால் அமைத்து, அதன் பின்னா் வயல்களை சீரமைப்பு செய்து நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

பாரம்பரியமான முறையில் நெல் நடவுப்பணிகள்:

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் நெற்பயிா் விவசாயம் மனித சக்தியை பயன்படுத்தி நடைபெறும். தற்போது இயந்திர மயமாகி வந்தாலும் அறுவடை செய்தல், உழவுப்பணிகள் மேற்கொள்வதை தவிா்த்து நாற்று நடவுப்பணிகளை பெண்கள் மூலமாக பாரம்பரியமான முறையில் செய்வதற்கே தாங்கள் ஆா்வம் காட்டுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT