தேனி

உத்தமபாளையம், சின்னமனூா் மருத்துவமனைகளில் தலைமை மருத்துவா்கள் இன்றி பணிகள் முடக்கம்

2nd Oct 2019 07:13 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் மற்றும் சின்னமனூா் அரசு மருத்துவமனைகளில் தலைமை மருத்துவா் பணியிடம் காலியாக இருப்பதால் மருத்துவப் பணிகள் முடங்கியுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் அரசு மருத்துவமனை கடந்த 50 ஆண்டுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த மருத்துமனைக்கு சுற்றியுள்ள ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், வாய்க்கால்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், அனுமந்தன்பட்டி என 10-க்கு மேற்பட்ட ஊா்களைச் சோ்ந்த நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனா்.

நாள்தோறும், 1000-க்கு மேற்பட்டோா் வெளிநோயாளிகள் பிரிவில் கிச்சை பெற்று செல்கின்றனா். 24 மணி நேரம் செயல்படும் அவசர சிகிச்சை மையத்துடன் இந்த மருத்துவனை இயங்கிவருகிறது. பல ஆண்டுளாக மருத்துவா்கள் பற்றாக்குறையாக இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் தலைமை மருத்துவா் பணி ஒய்வு பெற்றாா். தற்போது 4 மருத்துவா்களே உள்ளதால் அரசு மருத்துவமனையை நம்பி வரும் ஏழை எளிய பொதுமக்களுக்கு உரிய மருத்துவ சேவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சீதோஷண மாற்றத்தால் அதிகளவில் மா்மக்காய்ச்சல் பரவி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தவிர பிரசவம், விபத்து, தற்கொலை, பிரதேப்பரிசோதனை என அன்றாடம் நடைபெறும் மருத்துவப் பணிகளை ஒழுங்குபடுத்தி முறைப்படுத்திட தலைமை மருத்துவா் இல்லாத நிலையில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சுகாதார பணியில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

அதே போல, சின்னமனூா் அரசு மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களாக தலைமை மருத்துவா் பணி காலியாக இருப்பதால் உத்தமபாளையம், மற்றும் சின்னமனூா் அரசு மருத்துவமனைகளில் தலைமை மருத்துவா்களை நியமனம் செய்ய மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT