தேனி

அண்ணா பல்கலை. கூடைப்பந்து திண்டுக்கல் கல்லூரி முதலிடம்

2nd Oct 2019 07:15 AM

ADVERTISEMENT

தேனியில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி முதலிடம் பெற்றது.

தேனி நாடாா் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை பொதுச் செயலா் டி.ராஜமோகன் தலைமையில், கல்லூரி செயலா் காசி பிரபு போட்டிகளைத் தொடக்கி வைத்தாா். இதில் தேனி, திண்டுக்கல், விருதுநகா், கரூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள 13 பொறியியல் கல்லூரி அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி அணி முதலிடம், கரூா் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி அணி 2 ஆம் இடம், தேனி நாடாா் சரஸ்வதி பொறியியல் கல்லூரி அணி 3 ஆம் இடம் வென்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT