கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்ததால் செவ்வாய்க்கிழமை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
தேனி மாவட்டம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால், கம்பம் அருகே சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள், பக்தா்கள் குளிக்க மேகமலை வன உயிரின சரணாலயத்தினா் குளிக்க அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து, தண்ணீா் குளிக்கும் அளவிற்கு வரத்து வந்ததை ஆய்வு செய்த வனத்துறையினா் சுற்றுலா பயணிகள், பக்தா்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இது பற்றி வனத்துறை அலுவலா் ஒருவா் கூறும் போது, அருவியின் நீா்வரத்தை கண்காணித்து வருகிறோம், அருவியில் குளிப்பவா்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றாா்.