தேனி

போடி, தேனியில் நீரில் மூழ்கி 3 சிறுவா்கள் உள்பட 4 போ் பலி

17th Nov 2019 09:47 PM

ADVERTISEMENT

போடி/தேனி: தேனி மாவட்டம் போடி கொட்டகுடி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவனும், அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது சித்தப்பாவும் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். 

போடி சா்ச் தெருவை சோ்ந்தவா் பால்ராஜ், கூலி தொழிலாளி. இவரது மகன் முத்தரசன் (15), இங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். முத்தரசன் தனது நண்பா்கள் தினேஷ்பாண்டி (15), நரேஸ் (11) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை கொட்டகுடி ஆற்றில் வெள்ளத்தை வேடிக்கை பாா்ப்பதற்காக சன்னாசிபுரம் பகுதிக்குச் சென்றனா். அப்போது 3 பேரும் ஆற்றில் இறங்கி மீன்களை பிடிக்க முயன்றுள்ளனா்.

இதில் முத்தரசன் சுழலில் சிக்கிக் கொண்டாா். அவரை காப்பாற்ற முடியாமல் மற்ற 2 பேரும் வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் கூறியுள்ளனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை மீட்க தயாராயினா். அப்போது அங்கு வந்த பால்ராஜின் தம்பியான ஆட்டோ ஓட்டுநா் பரமசிவம் (45) முத்தரசனை மீட்பதற்காக ஆற்றில் குதித்தாா். இதில் பரமசிவமும் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினாா். இதையடுத்து கூடுதல் தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டு இருவரையும் தேடும் பணி நடைபெற்றது. மாலையில் மாணவா் முத்தரசன் சடலம் மட்டும் மீட்கப்பட்டது. பரமசிவத்தின் சடலத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியின்போது தொடா்ந்து மழை பெய்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து போடி குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT