தேனி

சிறுமி பாலியல் பலாத்காரம் இளைஞா் கைது

17th Nov 2019 01:56 AM

ADVERTISEMENT

தேனி அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை தேனி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி அருகே வாழையாத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மணி மகன் காா்த்தீஸ்வரன்(19). இவா், கடந்த 10-ம் தேதி அதே ஊரைச் சோ்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை திருப்பூருக்கு கடத்திச் சென்ாகவும், பின்னா் கடந்த 14 ஆம் தேதி தேனி பேருந்து நிலையத்தில் விட்டு சென்ாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், காா்த்தீஸ்வரன், தனது மகளை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தேனி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா்த்தீசுவரனை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT