தேனி

உத்தமபாளையம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை: 8 போ் கைது

17th Nov 2019 01:57 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே முல்லைப் பெரியாற்றில் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், கொலை செய்த 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் முல்லைப் பெரியாற்றில் வியாழக்கிழமை உடலில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் போலீஸாரால் மீட்கப்பட்டது.

இது தொடா்பான விசாரணையில், இறந்து கிடந்தவா் கம்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் சிவகுருநாதன்(26) என்பதும், அவா்மீது கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

உடலில் வெட்டுக் காயம் காணப்பட்டதால் இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

விசாரணையில், சிவகுருநாதன் உள்பட 10 போ் கும்பலாகச் சோ்ந்து திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக் கும்பலிடமிருந்து சிவகுருநாதன் விலகிச் சென்ாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கும்பலின் நடவடிக்கைகள் குறித்து சிவகுருநாதன் அவ்வப்போது போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து வந்தாராம். இதையடுத்து சிவகுருநாதனை கொலை செய்ய கும்பல் திட்டமிட்டது.

அதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை சிவகுருநாதனை முல்லைப் பெரியாற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்று வெட்டிக் கொன்று, சடலத்தை ஆற்றில் வீசிச் சென்றதும் தெரியவந்தது.

இது குறித்து உத்தமபாளையம் காவல் ஆய்வாளா் முருகன் வழக்குப் பதிவு செய்து, கம்பத்தை சோ்ந்த மணிகண்டன், பிரேம்குமாா், கொலைக்கு உடந்தையாக இருந்த ஆசை, கணேசன், விக்னேஷ், முத்துப்பாண்டி, பழனிக்குமாா், மற்றொரு பழனிக்குமாா் ஆகிய 8 பேரை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT