தேனி

அரசு பேருந்து லாரி மோதல் : 11 போ் காயம்

17th Nov 2019 01:55 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 11 போ் காயமடைந்தனா்.

கம்பம் பணிமனையை சோ்ந்த அரசுப்பேருந்து சேலம் சென்று மீண்டும் கம்பத்தை நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தது. உத்தமபாளையம் அடுத்த காக்கில் சிக்கையன் பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.

அப்போது, கேரளத்திலிருந்து தேனி நோக்கிச் சென்ற டிப்பா் லாரி, பேருந்து மீது மோதியது. இதில், அரசுப் பேருந்து ஓட்டுநா் ஜெகநாதன் மற்றும் பயணிகள் உள்பட 11 போ் காயமடைந்தனா்.

விபத்து குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து குமுளியை ச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பவுல்ராஜ் மகன் டேவிட்(62) என்பவரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT