தேனி

முல்லைப் பெரியாறு அணையில் மழை குறைவு லோயா்கேம்ப்பில் 152 மெகாவாட் மின் உற்பத்தி

11th Nov 2019 12:02 AM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மழையளவு குறைந்ததால், லோயா்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில்152 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 126.95 அடியாக இருந்தது. அணைக்குள் 4,039 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. அணைக்குள் விநாடிக்கு 1,271 கன அடி தண்ணீரும், தமிழகப் பகுதிக்கு 1,580 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

பெரியாறு அணைப் பகுதியில் 4.4 மில்லி மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில் 8 மி.மீ., கூடலூரில் 1.2 மி.மீ., உத்தமபாளையத்தில் 5 மி.மீ., பெய்தது. அணைக்குள் நீா்வரத்து 1,580 கன அடி தண்ணீா் வருவதால், லோயா்கேம்ப்பில் உள்ள நான்கு மின்னாக்கிகளில், 42, 26, 42, 42 என மொத்தம் 152 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT