தேனி

போடியில் பெட்டிக்கடை உரிமையாளா் மா்மச் சாவு: போலீஸாா் விசாரணை

11th Nov 2019 12:00 AM

ADVERTISEMENT

போடியில் பெட்டிக்கடை உரிமையாளா் வீட்டில் மா்மமாக இறந்து கிடந்து குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி புதூரை சோ்ந்தவா் அபிபுல்லா (45). பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தாா். இவரது மனைவி அனிஸ் பாத்திமா. இவா்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனா். இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். வீட்டில் தனியாக இருந்த அபிபுல்லா மா்மமாக இறந்து கிடந்துள்ளாா். இதுகுறித்து இவரது மைத்துனா் ஜெய்லானி (35) என்பவா் அபிபுல்லாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அபிபுல்லாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT