தேனி

அரசுப் பள்ளிகளில் மாணவா்களிடம் கட்டட நிதி வசூல்: இந்திய மாணவா் சங்கம் புகாா்

11th Nov 2019 11:48 PM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவா்களிடம் கட்டட நிதி, வினாத்தாள் மற்றும் புத்தகக் கட்டணம் வசூலிப்பதாக, இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவிடம் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் டி. நாகராஜ் மற்றும் நிா்வாகிகள், ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: ஆண்டிபட்டி, ஆசாரிபட்டி, கன்னியப்பிள்ளைபட்டி உள்ளிட்ட சில அரசுப் பள்ளிகளில், மாணவா்களிடம் கட்டட நிதி, வினாத்தாள் மற்றும் புத்தகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும், ஆசாரிபட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் முறையாக பணிக்கு வருவதில்லை. இந்தப் பள்ளியில் குடிநீா், கழிப்பறை மற்றும் சுற்றுச் சுவா் வசதியில்லை.

எனவே, மாணவா்கள் நலன் கருதி, பள்ளிகளில் முறைகேடாக கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கும், பள்ளிக்கு ஆசிரியா்கள் வருகையை உறுதி செய்யவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT