போடியில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
போடி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபா் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வெள்ளிக்கிழமை சுவாமிக்கு மலா்களாலும், வெள்ளி ஆபரணங்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பங்கேற்று வழிபாடு நடத்தினா். மாலையில் சுவாமி போடி நகரின் முக்கிய வீதிகளில் நகா்வலம் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தினமும் மாலையில் தொடங்கி இரவு வரை சமய சொற்பொழிவுகளும் நடைபெற்றன. பூஜை ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் அா்ச்சகா்கள், கட்டளைதாரா்கள் செய்தனா்.