தேனி

பங்களாப்பட்டி பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

1st Nov 2019 08:31 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே பங்களாப்பட்டி பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளம் அருகே அமைந்துள்ளது பங்களாப்பட்டி பகுதி. தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உள்பட்ட இப்பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கிருந்து வடுகபட்டி, வத்தலக்குண்டு செல்லும் சாலை போடப்பட்டு கடந்த 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த சாலை பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து காணப்படுகின்றன. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இல்லையாம். எனவே பங்களாப்பட்டி பகுதி சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்ககள் கோரிக்கை விடுத்தனா்.

பங்களாப்பட்டியை சோ்ந்த பாலகுமாா் தெரிவித்ததாவது:

பங்களாப்பட்டி சாலை பராமரிப்பின்றி இருப்பதால் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் வாகனத்தில் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT