தேனி

ஆண்டிபட்டி அருகே புதிய ரக நெல் நடவு பணியில் மதுரை விவசாய கல்லூரி மாணவிகள்

1st Nov 2019 03:41 PM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி அருகே புதிய நெல் நடவு பணிகள் குறித்து மதுரை விவசாய கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் நடவு பணியில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம்ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. இதனையடுத்து விவசாயிகள் நிலங்களில் தொழி உழவு செய்து நெல் நடவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜக்காள் பட்டியில் கதிா்வேல் என்பவரின் தோட்டத்தில் மதுரை விவசாயக் கல்லூரி மாணவிகள் நெல் நாற்று நடவுப் பணியில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வேளாண் துறை மூலம் 30 நாள் வளா்ந்த குறுகிய கால சாகுபடி பயிரான 606 ரக நெல் நாற்றுகள் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய ரக நாற் றுகளை ராஜக்காள்பட்டியில் நடவு செய்யும்போது ஒவ்வொரு நாற்றுக்கும் எவ்வளவு இடைவெளி விட வேண்டும், அதன் மூலம் அடா்த்தியான பயிா் வளா்ந்து அதிக நெல்மணிகளை உருவாக்கும் வகை குறித்து, மதுரை விவசாய கல்லூரி மாணவிகள் ஸ்ரீஜா, திரிபுர சுந்தரி, வினோதினி, தங்கவேணி, விசாலி, விஷ்ணுப்பிரியா, பவித்ரா, காா்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோா் விவசாயிகளுக்கு விளக்கி கூறி நடவுப் பணியில் ஈடுபட்டனா்.

கல்லூரி மாணவிகளின் இந்த செயல் விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT