உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்குச் சாவடி பட்டியல்: கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள்

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வரைவு வாக்குச் சாவடிகள்

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வரைவு வாக்குச் சாவடிகள் குறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபணைகளை, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மே 2-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அல்லது உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
       தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச் சாவடிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் தெரிவித்தது:
     மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,161 வார்டுகள், 6 நகராட்சிகளில் உள்ள 117 வார்டுகள், 22 பேரூராட்சிகளில்  உள்ள 336 வார்டுகளுக்கு மொத்தம் 1,575 வரைவு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
     வரைவு வாக்குச் சாவடி பட்டியல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சிகள் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
 இந்தப் பட்டியலை, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பார்வையிட்டு, வாக்குச் சாவடியின் உறுதித்தன்மை, அடிப்படை வசதிகள், சாய்தள வசதி, ஒரே பகுதியில் அதிக வாக்குச் சாவடிகள் இருப்பது, வாக்குச் சாவடியில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் இடம் பெற்றிருப்பது ஆகியன குறித்தும் தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபணைகளை மே 2-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி உதவி இயக்குநர், நகராட்சி ஆணையர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என்றார்.    இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பா.திலகவதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சங்கரநாராயணன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com