தேனி

தேனி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:  முதியவர் கைது

31st Jul 2019 08:12 AM

ADVERTISEMENT

தேனி அருகே பத்திரகாளிபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, முதியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பத்திரகாளிபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துவீரப்பன் மகன் அய்யப்பன் (68). இவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் இரு சிறுமிகளை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து குழந்தைகளின் தாயார் அளித்த புகாரின்பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, முதியவர் அய்யப்பனை கைது செய்தனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT