தேனி

ஜங்கால்பட்டியில் அருந்ததியர் குடியிருப்புக்கு குடிநீர் வசதி செய்து தரக் கோரிக்கை

31st Jul 2019 08:13 AM

ADVERTISEMENT

தேனி அருகே ஜங்கால்பட்டியில் அருந்ததியர் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரக் கோரி திங்கள்கிழமை தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தேனி ஒன்றியச் செயலர் வி.ராமர் மற்றும் ஜங்கால்பட்டி அருந்ததியர் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: ஜங்கால்பட்டி ஊராட்சியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 70 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் குடிநீர் மற்றும் பொது சுகாதார வளாகம் இல்லை. 
ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் இக்குடியிருப்பு பகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தும், திட்டத்தை செயல்படுத்துவதில் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர். எனவே ஜங்கால்பட்டி, அருந்ததியர் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT