தேனி

தேனியில் ஆக. 1 இல் கூடைப்பந்து பயிற்சிக்கு வீரர்கள் தேர்வு

30th Jul 2019 08:52 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆக.1 ஆம் தேதி கூடைப் பந்து பயிற்சிக்கு மாணவ, மாணவிகள் தேர்வு நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆக. 1 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் கூடைப்பந்து பயிற்சிக்கான தேர்வில், உலக திறனாய்வுத் திட்டத்தின் கீழ் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றோர் மற்றும் விளையாட்டு விடுதிகளில் தங்கிப் படிக்கும் 10 முதல் 14 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
தகுதி மற்றும் உடற்திறன் அடிப்படையில் தலா 10 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர்களுக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வாரத்திற்கு 5 நாள்கள் வீதம் 6 மாதம் வரை கூடைப்பந்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் சேர்பவர்களுக்கு அரசு சார்பில் போக்குவரத்துப் படி மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT