தேனி

தேனியில் மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை, கோவை அணிகள் வெற்றி

29th Jul 2019 08:55 AM

ADVERTISEMENT

தேனியில் என்.எஸ்.மில் கூடைப் பந்து விளையாட்டு கிளப் சார்பில் கல்லூரி அணிகளுக்கு இடையே நடைபெற்ற மாநில அளவிலான கூடைப் பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை கல்லூரி அணிகளும், பெண்கள் பிரிவில் கோவை கல்லூரி அணிகளும் முதலிடம் பிடித்தன. 
தேனி, என்.எஸ்.மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை லீக் மற்றும் சூப்பர் லீக் முறையில் நடைபெற்ற போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 12 கல்லூரி அணிகளும், பெண்கள் பிரிவில் 6 கல்லூரி அணிகளும் மோதினர். 
இதில், இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை, லயோலா கல்லூரி மற்றும் எஸ்.ஆர்.எம்.,பல்கலைக் கழக அணிகள் முதலிடம் வென்றன. சென்னை கிறிஸ்தவ கல்லூரி மற்றும் சத்தியபாமா பல்கலைக் கழக அணிகள் 2-ம் இடம் வென்றனர். பெண்கள் பிரிவில் கோவை பி.எஸ்.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பி.எஸ்ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணிகள் முதலிடம் வென்றன. சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவ் கல்லூரி மற்றும் எஸ்.ஆர்.எம்.,பல்கலை கழக அணிகள் 2-ம் இடம் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற் கேடயம் மற்றும் பரிசுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் வழங்கினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT