தேனி

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

27th Jul 2019 07:15 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அகில இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கம்பம் தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு  மாவட்டத் தலைவர் சி.ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழ்பெருமாள் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் எம்.வி.கல்யாணசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் பாலு, நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு  பிரதமர் முகவரியிட்ட அஞ்சல் அட்டைகளை தபால் பெட்டியில் போட்டு போராட்டத்தை தொடக்கி வைத்தனர். மாவட்ட பொருளாளர் எம்.வி.கே.மணிகண்டன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT