தேனி

கம்பத்தில் மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஆலோசனை

27th Jul 2019 07:18 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில், குழு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கம்பத்தில் நடத்துவது குறித்த  ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது.
உத்தமபாளையம் கல்வி  மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, இந்த ஆண்டு கம்பம் நாகமணி நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி நடத்துகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பதி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் எம்.எஸ்.எஸ். காந்தவாசன் முன்னிலை வகித்தார்.
இதில் பங்கேற்ற, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் இளங்கோ, விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி விளக்கினார்.
கூட்டத்தில், உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக,  பள்ளி முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார்.
ஏற்பாடுகளை, பள்ளி துணை முதல்வர்கள் சரவணன், லோகநாதன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT