தேனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்றக் கோரி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேன, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தேனி கிழக்கு மாவட்டச் செயலர் ப.நாகரத்தினம் தலைமை வகித்தார். தேனி மேற்கு மாவட்டச் செயலர் சு.சுருளி முன்னிலை வகித்தார். நாடு முழுவதும் ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தனிச் சட்டமியற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேனி மக்களவைத் தொகுதி செயலர் இரா.தமிழ்வாணன், மாநில துணைச் செயலர் இரா.ஆதிமொழி ஆகியோர் பேசினர்.