தேனி

பெரியகுளம் வராக நதியில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட இளைஞர் மன்றத்தினர்

22nd Jul 2019 10:05 AM

ADVERTISEMENT

பெரியகுளம் வராக நதியில் பாலசுப்பிரமணியர் கோயில் படித்துறையில் தாமரைக்குளத்தை சேர்ந்த விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குப்பைகளை அகற்றியும், துணி மற்றும் அழுகிய பொருள்களையும் அகற்றி சுத்தப்படுத்தினர். மேலும் படித்துறையில் வழிபாடு செய்ய வந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துணிகளை குப்பை தொட்டியில் போடுங்கள் என அறிவுறுத்தினர். சேகரிக்கப்பட்ட குப்பை மற்றும் துணிகள் பெரியகுளம் நகராட்சி மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
 தூய்மைப் பணியில் மேல்மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ரெங்கராஜ் மற்றும்  விழுதுகள் இளைஞர் மன்ற துணைச் செயலர் அஜீத்பாண்டி,  பொருளாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT