தேனி

பெரியகுளத்தில் பேருந்து உரிமையாளர் மாயம்

22nd Jul 2019 10:07 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே பேருந்து உரிமையாளர் மாயமானதாக காவல்நிலையத்தில் சனிக்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.
 பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்த சுஜாதா மகன் சஞ்சய் (30). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் பெரியகுளம்- குமுளி செல்லும் வழித்தடத்தில் பேருந்தை சொந்தமாக இயக்கி வருகிறார். 
இவரது பேருந்தை சிலர் சில நாள்களுக்கு முன் விலைக்கு கேட்டுள்ளனர். ஆனால் அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை வெளியே சென்றவர் திரும்பி வரவில்லையாம். செல்லிடப்பேசியிலும் தொடர்பு கொள்ளமுடியவில்லையாம்.
இதனால்  சுஜாதா தென்கரை காவல்நிலையத்தில் சனிக்கிழமை புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT