தேனி

கிணற்றில் குதித்தவர் நீரில் மூழ்கி பலி

22nd Jul 2019 10:06 AM

ADVERTISEMENT

போடி அருகே விசுவாசபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (21). இவர் இப்பகுதியில் உள்ள தொந்தி என்பவரது கிணற்றில் பயிற்சி செய்வதற்காக குதித்துள்ளார். இதில் தண்ணீருக்குள் மூழ்கியபோது மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணிநேரம் போராடி கருப்பையாவின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT