தேனி மாவட்டம் கம்பம் புறவழிச்சாலை அமையும் இடத்தில் உள்ள விவசாய கிணறுகளை மூடாமல் பணிகளை தொடங்க வேண்டும் என விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் நான்குவழிச்சாலை திட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து, நடைபெற்று வருகிறது. தற்போது கம்பம் க.புதுப்பட்டியிலிருந்து, கூடலூர் வரையிலான புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நான்கு வழிச் சாலை அமையும் பாதைகளில் பெரும்பாலான, இடங்களில் விவசாயக் கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளின் மூலம் தான் கடந்த பல ஆண்டுகளாக தோட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது.
அதனால் நான்கு வழிச் சாலை அமைக்கும் போது விவசாய கிணறுகளை மூடாமல், மாற்றுப் பாதையில் திட்டத்தை செயல்படுத்த தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.