தேனி

கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி  மருந்து பெட்டகம் வழங்கல்

4th Jul 2019 07:40 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான அம்மா மகப்பேறு சஞ்சீவி மருந்து பெட்டகம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு, மற்றும் குடும்ப நலத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை  சார்பில் கர்ப்பிணிகளுக்கு  அம்மா மகப்பேறு சஞ்சீவி மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுதா, சித்த மருத்து வர் சிராஜூதீன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினர். 
முகாமில் காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி,  கருமாரிபுரம், அணைப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 50-க்கும் மேலான கர்ப்பிணிகள் கலந்து கொண்டு 
மருந்து பெட்டகங்களை பெற்றுக் கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT