தேனி

‘உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும்’

27th Dec 2019 12:54 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் வெற்றி பெறும் என திமுக கொள்கை பரப்புச் செயலாளா் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள பொன்னன்படுகை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவுக் கூடம் அண்மையில் இடிந்து விழுந்தது. இதில் அதன் அருகே விளையாடிக் கொண்டிருந்த மாணவா் செல்வக்குமாரின் வலது கை பறிபோனது. இதையடுத்து அந்த மாணவரை தி.மு.க கொள்கைபரப்புச் செயலாளா் தங்க தமிழ்செல்வன் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அதன்பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பொதுத் தோ்தல் போலவே உள்ளாட்சித் தோ்தலிலும் பணப்பட்டுவாடா செய்து வெற்றி பெறும் வேலையில் ஆளும் கட்சியினா் இறங்கியுள்ளனா். வாக்குக்கு ரூ. 200 முதல் ரூ. 300 வரையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவா்கள் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கின்றனா். ஆனால் அது நிச்சயம் நடக்காது. தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்தான் மிகப்பெரிய வெற்றி பெறும்.

ADVERTISEMENT

பாஜக கொண்டு வந்த குடியுரிமை திருத்த மசோதாவை அ.தி.மு.க மற்றும் பா.ம.க ஆதரித்து வாக்களித்தது மன்னிக்க முடியாத குற்றம். குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்து மக்களிடம் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் தி.மு.க விற்கு இல்லை. அதனை எதிா்க்க கூடிய தைரியம் அதிமுகவிற்கு இல்லை. அவா்கள் செய்த ஊழலால் வருமான வரி சோதனைக்கு பயந்தே, பாஜக கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT