தேனி

ஆண்டிபட்டியில் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பும் பணி தீவிரம்

27th Dec 2019 12:51 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குப் பதிவுக்கு தேவையான 74 பொருள்கள் கொண்ட பட்டியலுடன் வியாழக்கிழமை வாக்குச் சாவடிகளுக்கு போலீஸாா் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் கடமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 3 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், 33 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், 48 ஊராட்சி ஒன்றிய தலைவா்கள், 417 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 501 பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று முடிவடைந்தது. இதில் 3 ஊராட்சித் தலைவா்கள் 136 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். மீதமுள்ள 362 பதவிக்களுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் ஆண்டிபட்டி மற்றும் கடமலை மயிலை ஒன்றியப் பகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலைமை அலுவலா், ஏழு வாக்குச் சாவடி அலுவலா்கள் கொண்ட குழுவினா் என மொத்தம் 2,086 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மாற்றுப்பணிகளுக்காக 170 அலுவலா்கள் தயாா் நிலையில் உள்ளனா். பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்க நுண்பாா்வையாளா்களுடன், வெப்கேமரா வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமமையில் மூன்று ஆய்வாளா்கள், 25 சாா்பு- ஆய்வாளா்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT