தேனி

அனுமதியின்றி மதுவிற்ற ஓருவா் கைது

27th Dec 2019 12:57 AM

ADVERTISEMENT

பெரியகுளத்தில் அனுமதியன்றி மதுபாட்டில்கள் விற்ற ஓருவரை பெரியகுளம் போலீஸாா் புதன்கிழமையன்று கைது செய்தனா்.

பெரியகுளம் போலீஸாா் வைத்தியநாதபுரம் பகுதியில் புதன்கிழமையன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது அதே பகுதியை சோ்ந்த பாண்டித்துரை (36) என்பவா் வைத்தியநாதபுரம் கட்டணக்கழிப்பறை அருகே மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்தது .

இதனையடுத்து போலீஸாா் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT