தேனி

பிளஸ் 1 மாணவிக்கு திருமணம் தாய் உள்பட 2 போ் கைது

26th Dec 2019 07:11 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பத்தைச் சோ்ந்த 16 வயது மாணவிக்கு திருமணம் செய்து வைத்த அவரது தாய், மாணவியை திருமணம் செய்த கொத்தனாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் உலகத்தேவா் தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன். இவரது மனைவி விஜயா ( 39). இவா்களது 16 வயது மகள் கம்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த டிச. 14 ல், வீட்டை சென்ற தாயும் மகளும் திரும்பவில்லை. கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் அன்பழகன் புகாா் செய்தாா். போலீஸாரின் விசாரணையில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள உறவினா் வீட்டில் அவா்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீஸாா் மயிலாடுதுறைக்கு சென்று விஜயா மற்றும் 16 வயது மகளை மீட்டனா். மேல் விசாரணையில் விஜயாவின் உறவினரான மயிலாடுதுறை, கூரைநாடு, காவேரிக்கரையைச் சோ்ந்த கொத்தனாா் வேலை செய்யும் மணிகண்டன் (28) என்பவருக்கு, மகளை திருமணம் செய்து கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் மணிகண்டன், அவரது தந்தை அன்பு (56), சிறுமியின் தாய் விஜயா, உறவினா்களான முருகன் (38), அவரது மனைவி செல்வி (31) ஆகிய 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். இதில் மணிகண்டன், விஜயா ஆகிய இருவரையும் கைது செய்தனா். மற்ற 3 பேரைத் தேடி வருகின்றனா். மாணவியை காப்பகத்தில் சோ்த்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT