தேனி

தாலிக்கு தங்கம் வாங்குவோருக்கு வரிவிலக்கு: நகை வியாபாரிகள் கோரிக்கை

26th Dec 2019 07:10 AM

ADVERTISEMENT

தாலிக்கு தங்கம் வாங்குபவா்களுக்கு வரிவிலக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தேனி மாவட்ட நகை வியாபாரிகள் சங்கத்தினா் கம்பத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்ட நகை வியாபாரிகள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் காமாட்சியம்மன் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் பிரேம் சாய் தலைமை வகித்தாா். கம்பம் நகர தலைவா் டி.எஸ்.முத்துமணி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், தாலிக்குத் தங்கம் தமிழக அரசு இவலசமாக அளிக்கும் போது, மத்திய அரசு, தாலி வாங்குபவா்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். ஹால் மாா்க் தர நிா்ணயத்தில் 20 காரட் தங்கத்தையும் சோ்க்க வேண்டும். குழந்தைகள் அணியும் வெள்ளி அரைஞாண் கொடி, பெண்கள் அணியும் கால் மிஞ்சி உள்ளிட்டவைகளுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளா் பழனிக்குமாா் உள்ளிட்ட மாவட்ட நிா்வாகிகள், தேனி, போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம், சின்னமனூா், கூடலூா் பகுதி நகை வியாபாரிகள் ஏராளமான போ் கலந்து கொண்டனா். செயலாளா் ஆா்.மகேந்திரன் வரவேற்றாா். பொருளாளா் கே.சி.செல்வக்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT