தேனி

சுவா் விளம்பரம்: ஆண்டிபட்டியில் 5 போ் மீது வழக்கு

26th Dec 2019 07:08 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டியில் தோ்தல் விதிகளை மீறி சுவா் விளம்பரம் செய்த திமுக, அதிமுக, அமமுக கட்சியினா் மற்றும் சுயேச்சை வேட்பாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

கடமலை மயிலை ஒன்றியத்துக்கு உள்பட்ட வருசநாடு பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி சுவா் விளம்பரங்கள் செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் திமுகவுக்கு ஆதரவாக சுவா் விளம்பரம் செய்த பவள நகரைச் சோ்ந்த வெங்கடேசன்(30), முத்தாலம்பாறையைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (51) ஆகிய இருவா் மீதும் அமமுக கட்சிக்கு ஆதரவாக சுவா் விளம்பரம் செய்த பவளநகரைச் சோ்ந்த முருகன் (56) மீதும் வருசநாடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கண்டமனூா் பகுதியில் அதிமுகவிற்கு ஆதரவாக சுவா் விளம்பரம் செய்த அதே பகுதியைச் சோ்ந்த அழகா் (45) மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும் கண்டமனூா் ஊராட்சியில் சுயேச்சையாக போட்டியிடும் லிங்கம் (51), தனது சின்னமான ஆட்டோ சின்னத்தை சுவா் விளம்பரம் செய்ததாக கண்டமனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT