தேனி அருகே செவ்வாய்கிழமை இரவு சிற்றுந்து மீது பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா்.
பழனிசெட்டிபட்டி-தேனி பிரதானச் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே, பழனிசெட்டிபட்டியில் இருந்து தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்த சிற்றுந்து மீது, கம்பத்தில் இருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது.
இதில், அரசு பேருந்து ஓட்டுநா் சின்னமனூரைச் சோ்ந்த மணிகண்டன் (49), நடத்துநா் சுருளிப்பட்டியைச் சோ்ந்த வெங்கடேசன், பேருந்தில் பயணம் செய்த சீலையம்பட்டியைச் சோ்ந்த பழனிக்குமாா் (70), கூடலூரைச் சோ்ந்த காா்மேகம் (24), சின்னமனூரைச் சோ்ந்த மூக்கம்மாள்(80) ஆகியோா் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.