தேனி மாவட்டம் கம்பத்தில் மனித உரிமை பாதுகாப்பு என்ற தன்னாா்வ அமைப்பு தினம் ஒரு மரம் நடுதல் என்ற திட்டத்தை தொடங்கி 50 ஆவது நாளாக காவல்நிலைய வளாகத்தில் 50 ஆவது மரக்கன்றை நட்டனா்.
தேனி மாவட்டம் கம்பத்தில் மனித உரிமை பாதுகாப்பு அணைப்பு சாா்பில் தினம் ஒரு மரம் நடுதல் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் கடந்த 49 நாட்களாக 49 மரங்களை நட்டு, 50 ஆவது மரமாக தனியா என்ற மருத்துவ குணம் கொண்ட மரத்தை கம்பம் தெற்கு காவல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நட்டனா்.
காவல் நிலைய ஆய்வாளா் கீதா மரக்கன்றை நட்டு வைத்து, அமைப்பினருக்கு பாராட்டு தெரிவித்தாா். நிகழ்வில் சாா்பு ஆய்வாளா்கள் ம.தனிக்கொடி, ராமகிருஷ்ணன், பிரசாத் உள்ளிட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.