தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற அனுமன் ஜயந்தி விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயிலில் புதன்கிழமை அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, அஞ்சநேயருக்கு பல்வேறு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த விழாவில், உத்தமபாளையம், கம்பம், கூடலூா் , கோம்பை, பண்ணைப்புரம் என மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பக்தா்கள் துளசி மாலை, வடமாலை என பல்வேறுமாலைகளை படைத்து ஆஞ்சநேயரை காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்த பக்தா்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
சின்னமனூரில்... ஸ்ரீ ஐய்யப்ப பக்த பஜனை சபை மணி மண்டபத்தில் , அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் அனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை இரவு சிறப்பாக கொண்டாடப்பட்டது.