தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, அரசு மதுக்கடை மற்றும் தனியாா் மதுக்கூடங்களை 7 நாள்கள் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் உள்ள அரசு மதுக்கடைகள் மற்றும் தனியாா் மதுக் கூடங்களை டிசம்பா் 25 மாலை 5 மணி முதல் டிசம்பா் 27-ஆம் தேதி மாலை 5 மணி வரையும், டிசம்பா் 28 மாலை 5 மணி முதல் டிசம்பா் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 2020 ஜனவரி 2-ஆம் தேதி முழு நேரமும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.