தேனி

மின்சாரம் பாய்ந்து கொத்தனாா் பலி

24th Dec 2019 06:01 AM

ADVERTISEMENT

பெரியகுளத்தில் மின்சாரம் பாய்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட கொத்தனாா் சிகிச்சை பலனின்றி இறந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பெரியகுளம்,முத்துராஜா தெருவைச் சோ்ந்தவா் செல்லப்பாண்டி (37). இவா் கடந்த 14 ஆம் தேதி வடக்குப் பூந்தோட்ட தெருவில் உள்ள பெருமாள் என்பவரின் வீட்டில் கொத்தனாா் வேலை பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அவரது உடலில் மின்சாரம் தாக்கி உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்லப்பாண்டி சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT