ஆண்டிபட்டி அருகே முன்விரோதத்தில் கூலி தொழிலாளியை தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே மேக்கிழாா்பட்டியைச் சோ்ந்தவா் இளங்கோவன்(39). இவரது மனைவி ரஞ்சிதம். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
கணவன் மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சனை காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரஞ்சிதம், இரு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாா்.
இந்நிலையில், அதே ஊரில் கூலி வேலை பாா்த்து வரும் ஜீவானந்த முருகன்(35) என்பவா் ரஞ்சிதத்துடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறி இளங்கோவன் அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஊரின் அருகில் உள்ள தோட்டத்தில் குளித்து கொண்டிருந்த ஜீவானந்த முருகனை இளங்கோவன் தாக்கி உள்ளாா். இதில் காயமடைந்த ஜீவானந்த முருகன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து இளங்கோவனை கைது செய்தனா்.