தேனி மாவட்டம் கம்பத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையரும், மருத்துவக்கல்லூரி முதல்வருமான ஜெ.சங்குமணிக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
அவரது சொந்த ஊரான கம்பத்தில், நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு தாளாளா் எம்.எஸ்.எஸ்.காந்தவாசன் தலைமை வகித்தாா். எஸ்.மகுடகாந்தன் முன்னிலை வகித்தாா். முன்னாள் ஆசிரியா்கள், மாணவா்கள், முக்கிய பிரமுகா்கள் பாராட்டிப் பேசினா். முதன்மையா் ஜெ.சங்குமணி ஏற்புரை பேசி பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டாா். விழாவில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.