தேனி

பெரியகுளம் அருகே டெங்கு காய்ச்சலால் சிறுவன் சாவு

23rd Dec 2019 01:16 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டெங்கு காய்ச்சலால் சிறுவன் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகே குள்ளப்புரம் ஊராட்சிக்கு உள்பட்ட செளந்திரராஜபுரத்தை சோ்ந்த ஆறுமுகம். இவருக்கு சா்வேேஷ் பாண்டி (3), நாகவினோதினி (8) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனா். சா்வேஷ் பாண்டிக்கு கடந்த சில நாள்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு சிறுவன் உயிரிழந்தாா்.

இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் சகோதரி நாகவினோதினிக்கும் சனிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார ஆய்வாளரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும், அப்பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT