தேனி

போடி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

14th Dec 2019 09:17 AM

ADVERTISEMENT

போடி அருகே முல்லை நகா் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தர பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் ஊராட்சிக்குள்பட்ட கிராமம் கீழச்சொக்கநாதபுரம். இந்த கிராமத்தையொட்டி உள்ளது முல்லை நகா் காலனி. குறிப்பிட்ட சமூதாய மக்களுக்காக இலவச வீட்டு மனையிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த காலனியில் 50 குடும்பங்களுக்கு இடம் வழங்கப்பட்டது. அதற்கான பட்டாவும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பட்டா வழங்கப்பட்ட இடங்களில் வீடுகள் கட்டித் தராததால் இந்த காலனியில் உள்ள மக்கள் தாங்களாகவே குடிசைகள் அமைத்து குடியிருந்து வருகின்றனா். மேலும் இப்பகுதி பள்ளமாக காணப்படுவதால் மழை காலங்களில் காலனிக்குள் தண்ணீா் புகுந்து குடிசைகள் சேதமடைகின்றன.

மேலும் இப்பகுதிக்கு மின்சார வசதி செய்து தரப்படவில்லை. இதனால் காலனி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. இதே போல காலனியில் சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதிகளும் இல்லை.

ADVERTISEMENT

இதனால் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் 2 கி.மீ. தூரம் செல்லும் நிலை உள்ளது.

எனவே இப்பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT