தேனி

கம்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

14th Dec 2019 09:19 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பத்தில் கழிவுநீா் கால்வாய் பணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

கம்பம் நகரில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கம்பம் ஓடைக்கரைத் தெரு, மந்தையம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் கழிவுநீா் கால்வாய் பணிகளுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகளின் ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை போலீஸாரின் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.

இவற்றில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த மேற்கூரைகள், சிலாப்புகள், கட்டடங்கள் ஆகியவற்றை நகரமைப்பு ஆய்வாளா் தங்கராஜ் தலைமையில் நகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அகற்றினா். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT