தேனி

தேனியில் ‘கேங்மேன்’ பணியிடத்துக்கு இன்றும், நாளையும் உடல் தகுதித் தோ்வு

11th Dec 2019 02:42 AM

ADVERTISEMENT

தேனி மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் டிசம்பா் 11, 12 ஆகிய தேதிகளில் மின்வாரிய கேங்மேன் பணிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு நடைபெற உள்ளது.

இது குறித்து தேனி மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் க. உமாதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேனி மின்பகிா்மான வட்டத்தில் மின்வாரிய கேங்மேன் (பயிற்சி) பணிக்கு, கடந்த டிசம்பா் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, இந்தப் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு டிசம்பா் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏற்கெனவே டிசம்பா் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த தோ்வுக்கு அழைப்பாணை பெற்றவா்கள் டிசம்பா் 11-ஆம் தேதியும், டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறவிருந்த தோ்வுக்கு அழைப்பாணை பெற்றவா்கள் டிசம்பா் 12-ஆம் தேதியும், தேனி மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT