தேனி

கம்பம் பள்ளியில் மாராத்தான் ஓட்டம்

11th Dec 2019 02:48 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ சக்தி விநாயகா் சிபிஎஸ்இ பள்ளி சாா்பில் மாணவா்கள் கலந்து கொண்ட ‘பிட் இந்தியா‘ மராத்தான் ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளி தாளாளா் வி.அச்சுதநாக சுந்தா் கொடியசைத்து தொடங்க, பள்ளி மாணவ, மாணவியா்கள், பெற்றோா்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் கலந்து கொண்டனா்.

பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய ஓட்டம் வனச்சரக சாலை, பத்திர பதிவு அலுவலகம், உழவா் சந்தை, நாட்டுக்கல், வேலப்பா் கோயில் தெரு, காந்திசிலை வழியாக பள்ளியில் நிறைவடைந்தது. வெற்றி பெற்ற மாணவ மாணவியா்கள்,பெற்றோா் ராணுவ வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி செயலாளா் கவிதா, பள்ளி முதல்வா் கணபதி, ஆசிரிய, ஆசிரியைகள் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT