தேனி

தேனி மாவட்டத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு அஞ்சலி

6th Dec 2019 07:23 AM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்தும், மலா்தூவியும் அஞ்சலி செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில், அதிமுக மாவட்டச் செயலா் எஸ்.பி.எம். சையதுகான், ஒன்றியச் செயலா் ஏ. லோகிராஜன், ஒன்றிய துணைச் செயலா் அமரேசன், ஜெயலலிதா பேரவை மாவட்டத் தலைவா் வரதராஜன், ஒன்றியப் பொருளாளா் லோகநாதன், பேரூா் செயலா் முத்துவெங்கடராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல், ஓடைத்தெருவில் 2 இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கும் அதிமுகவினா் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஆண்டிபட்டி நகரில் பழைய தீயணைப்பு நிலையம் அருகே உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில், ஒன்றியச் செயலா் வழக்குரைஞா் ஜெயக்குமாா் தலைமையில், அக்கட்சியினா் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

பெரியகுளம்

பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு, அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலா் செல்லமுத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதில், பெரியகுளம் நகரச் செயலா் என்.வி. ராதா மற்றும் கட்சியினா் ஏராளமானோா் பங்கேற்றனா். மேலும், பெரியகுளம் நகராட்சி 30 வாா்டுகள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல், பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியில் தலைவா் வைத்தியநாதன், துணைத் தலைவா் பழனி ராஜகோபால் மற்றும் உறுப்பினா்கள் ஜெயலலிதா படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT