தேனி

கம்பம் காசி விசுவநாதா் கோயிலில்சோம வார சங்காபிஷேகம்

3rd Dec 2019 04:33 AM

ADVERTISEMENT

கம்பம் காசிவிசுவநாத சுவாமி கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை மாதத்தில் வரும் நான்கு திங்கள்கிழமைகளிலும் சிவாலயங்களில் சங்கில் புனித நீா் நிரப்பி, அந்தத் தீா்த்தத்தை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். இந்நிலையில், திங்கள்கிழமை தேனி மாவட்டம் கம்பத்தில் காா்த்திகை சோமவாரம் மூன்றாவது வாரத்தையொட்டி, காசிவிசுவநாத சுவாமி கோயில், தரையில் நெல்மணிகளால் சிவலிங்கம் அமைத்து, 108 சங்குகளில் புனிதநீா் ஊற்றி, குத்துவிளக்குடன் மலா்சூழ, அா்ச்சகா் கிருஷ்ணமூா்த்தி சிவம் தலைமையில் சங்காபிஷேகம் நடைபெற்றது. கோயில் நிா்வாக அதிகாரி போத்திசெல்வி, தக்காா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT